புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சாஞ்சி மலையில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து ஸ்தூபிகளும் விகாரைகளும் கட்டப்பட்டன. இந்தப் புத்தகத்தில் கூறப்படும் ஸ்தூபி எண் 1 ஒரு சிறிய செங்கல் கட்டடமாக உருவாகி, பிற்காலத்தில் பிரம்மாண்ட வடிவை எடுத்தது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் புத்தரின் சிலைகள் இங்கு நிறுவப்பட்டன.
Be the first to rate this book.