சாணக்கியர் தென்னாட்டவராகத்தான் இருந்திருக்க வேண்டும். 'திரமிளர்' என்று அவருக்கு வழங்கும் பெயரே அவர் 'தமிழர்' என்பதைக் காட்டுகிறது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஆந்திர சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி பெறுகிறவரை 'திரமிளர்', 'திராவிடர்' என்றால் தமிழரையே குறிக்கும். இப்போதும் ஆந்திரர்கள் தமிழரைத் 'திராவிடர்கள்' என்றே சொல்வார்கள். அர்த்த சாஸ்திரத்தைக் கவனித்தால் தென்னாட்டைப் பற்றிய பல விவரங்களை அதில் காணலாம். குமாரன், குமரி என்ற தெய்வ வழிபாடு அவசியம் என்று அதில் குறித்திருப்பதைக் கண்டால், சாணக்கியர் கன்னியாகுமரியருகில் தோன்றியவராக இருக்க வேண்டும் என்பது புலனாகும். இப்போது கொச்சிப் பிராந்தியத்திலுள்ள பல மலைகளையும் ஆறுகளையும்பற்றி அதில் குறிப்பிடப்பட்டியிருப்பதைக் கவனித்தால் அவர் முசிரி அல்லது முயிரிக்கோடு (கொடுங்கோளூர் என்று வழங்கப்படும் ஊர்) என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியும். அந்தக் காலத்தில் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊர்; தமிழ்ப்பண்புக்கு நிலைக்களமாகவும் இருந்தது.
Be the first to rate this book.