ஜான் மோனகன், பீட்டர் ஜஸ்ட் இருவரும் இந்தோனேஷியா, மெக்சிகோ நாடுகளில் மேற்கொண்ட மிகச் சிறந்த களப்பணி விவரங்களைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளனர். இதன்மூலம் இந்நூலை வாசிப்போருக்கு மானிடவியலர்களின் தனித்துவமான களப்பணியானது எவ்வாறு மானிடவியலைச் சமூக அறிவியல் களிலிருந்து பிரித்துக்காட்டுகிறது என்பதை விளக்குகின்றனர்.
இந்நூல்வழி, மானிடவியல் தொடங்கிய காலந்தொட்டு நிலவி வரும் மிக ‘முக்கிய’மான விவாதங்களான மனிதகுலத்தின் தனித்தன்மை யாது? மனிதர்கள் எவ்வாறு குடும்பமாக, வர்க்கமாக, பழங்குடியாக, தேசிய இனமாக உருவாகிறார்கள்? இவர்களை எது ஒன்றிணைக் கிறது? நம்பிக்கை முறை, பரிமாற்ற முறை, தன்னிலை ஆகியவற்றின் தன்மைகள் என்ன? போன்றவற்றைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவாதிக்கின்றனர்.
Be the first to rate this book.