ஒரு நிமிடக் கதை என்றால் ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்து விடும் ஒரு சம்பவத்தைப் பற்றிய கதை என்பதல்ல. ஒரு நிமிடத்தில் படித்து முடித்துவிடக் கூடிய கதை. ஒரு நிமிடத்தில் என்ன கதை சொல்லிவிட முடியும்? பெரிய சவால்தான். ஓவியர்கள் ஒரு பெரிய பொட்டையும், முறுக்கு மீசையையும் மட்டும் வரைந்து பாரதியை நம் முன் நிறுத்துவார்கள். ஒரு வட்டக் கண்ணாடி, கைத்தடியில் காந்தித் தாத்தா கண் முன் வருவார். அது போலவே, வரத.இராஜமாணிக்கமும் குறைந்த சொற்களில், மூன்று நான்கு பத்திகளில் ஒரு கோட்டுச் சித்திரமாக ஒரு கதையை நம் கண் முன் நிகழ்த்திக் காட்டுகிறார்.
Be the first to rate this book.