சாம்பைய்யா, கிராமத்து மண்ணில் பிறந்தார். மண்ணோடு மண்ணாய் வளர்ந்தார். இயற்கை பாடம் கற்றுத் தந்தது. இந்த பூமி, எழுதும் பலகை ஆனது. ஏர், ஓர் எழுதுகோல். வயலும், வயலைச் சார்ந்த இடங்களும் பாடசாலை. பூமி கற்றுத் தந்ததை மனதில் ஏற்றுச் செயலாக்கிக் காட்டினார். விளைநிலம்தான் சாம்பைய்யாவின் தாய், தந்தை, ஆசான், தெய்வம், நட்பு, உறவு எல்லாமே. இந்தப் புவியின் சுழற்றி இருக்கும்வரை, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சாம்பைய்யா காணக்கிடைப்பார்.
Be the first to rate this book.