சைவ சமயத்தின் நான்கு தூண்களாக விளங்கியவர்கள் ‘சமயக்குரவர்கள் நால்வர்’ என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர். இந்தப் பெரியோர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து பல சிவாலயங்களுக்குச் சென்று பக்தி நெறியைப் பரப்பினர். பிற மதங்களால் சைவ சமயத்திற்கு ஏற்பட்ட சோதனைகளைத் தங்களது வாதத் திறமைகொண்டும் இறைஅருள்கொண்டும் தீர்த்துவைத்தனர். பேரரசர்களால் ஏற்பட்ட தடைகளைத் துணிந்து எதிர்கொண்டு அவர்களை நல்வழிப்படுத்தி, நாட்டு மக்களைக் காத்தனர். தங்களைச் சோதிக்க இறைவனால் நடத்தப்பட்ட திருவிளையாடல்களையும் பணிந்து ஏற்று தங்கள் பக்தியை நிரூபித்தனர்.
இந்த நால்வரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் அவர்களது தவ வாழ்வினையும் சமயத் தொண்டினையும் பக்திப் பரவசத்தோடு, சுருக்கமாகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இப்புத்தகத்தில் காட்சிப்படுத்துகிறார் ஜெயந்தி நாகராஜன்.
Be the first to rate this book.