காலநிலை மாற்றம் எனும் பெரும் பூதாகரப் பிரச்சனை நம் முன் உள்ளது. சகிக்கமுடியாத ஏற்றத்தாழ்வு வளர்ந்து வருவதுபோலவே காலநிலை மாற்றமும் இருக்கிறது. நாம் தொடர்ந்து அனைவருக்கும் சமூகநீதி, சமத்துவம் போன்ற மனித விழுமியங்களைக் கொண்ட சமத்துவ சமவுடைமை சமுதாயமாக இருப்போமா அல்லது காட்டுமிராண்டி சமூகமாக மாறிவிடுவோமா என்று ரோஸாலக்ஸம்பர்க் கூறியது காலநிலை மாற்றத்துக்கும் பொருந்தும். சமூகநீதி, சமவுடைமைப் பார்வையில் காலநிலை சிக்கலை தீர்க்கலாம் இல்லையேல் காட்டுமிராண்டி சமூகமாக மாறிவிடுவோம்.நகரமயமாதல், புவி வெப்பமடைதல், பெருங்கடலின் சூழலியல், நிலத்தடி நீரின் சிக்கல்கள், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள், ஒலி மாசு, நுண் நெகிழிகள்… என எதையும் மனிதன் விட்டுவைக்கவில்லை…
Be the first to rate this book.