சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும். அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். சாலிம் அலியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், சுவாரசியங்கள் ஒரு கதையின் திருப்பங்களுக்கு நிகரானவை. அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் சாலிம் அலியையும் அவருடைய பணியையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இந்த நூல்.
Be the first to rate this book.