விளையாட்டுகளிலோ வேடிக்கை பேச்சுகளிலோ நாட்டமில்லை சலீம் அலிக்கு. பறவை எப்படிப் பறக்கும்? எதைச் சாப்பிடும்? எப்படிக் குரல் கொடுக்கும்? கூடுகளை எப்படிக் கட்டும்? குஞ்சுகளை எப்படிப் பராமரிக்கும்?
அப்போது ஆரம்பித்த ஆர்வம் இறுதி வரை குறையவில்லை. காடு, மேடு, மலை, பாலைவனம் என்று சுற்றிக்கொண்டே இருந்தார். விதவிதமான பறவைகளைத் தேடிப்பிடித்து கவனமாக ஆராய ஆரம்பித்தார். இரவு, பகல், சாப்பாடு, தூக்கம் எதுவும் முக்கியமில்லை.
சலீம் அலியின் உழைப்பால்தான் இந்தியப் பறவைகள் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் பறவை இயல் என்ற துறையே இவருக்குப் பிறகுதான் உருவானது.
எளிமையான வாழ்க்கை, அசாதாரணமான உழைப்பு, நினைத்ததைச் சாதிக்கும் துணிவு எல்லாம் சலீம் அலியிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை.
Be the first to rate this book.