தமிழின் முன்னோடிப் பதிப்பாளர் சக்தி வை. கோவிந்தன் (1912 1966). பதிப்புலகிலும் பத்திரிகையுலகிலும் கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் உழைத்த, அதில் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்திய பதிப்பாளுமை. தொலைநோக்குடன் கூடிய செறிவான உள்ளடக்கத்தேர்வு, நேர்த்தியை நோக்கிய சிரத்தை மிக்க நூல் தயாரிப்பு, அதற்காகச் செலுத்திய கடும் உழைப்பு, பெரும் முதலீடு, துறை சார்ந்த பரிசோதனை முயற்சிகள், புதியவரை உருவாக்குதல், ஊக்குவித்தல் முதலிய சிறப்பம் சங்களுடன் இயங்கிய வை. கோவிந்தனின் பதிப்புச் செயல்பாடுகள், வாழ்க்கை குறித்த முதல் தமிழ் நூல். புத்தகம் போட்ட வரைப் பற்றிய புத்தகம்.
Be the first to rate this book.