துருக்கியின் வருங்காலத்தில் நிகழும் எவ்வொரு இஸ்லாமிய ஆளுகையின் மறுவுரைப்பிலும் இவர்கள், சமய உணர்வு மற்றும் இலட்சியத் துடிப்பிற்கான கவனக்குவிப்பு வழங்குவதில் இன்றி யமையாத பங்கு ஆற்றியவர்களாகப் பார்க்கப்படுவார்கள். வரலாற்றுப் போக்கு குறித்த ஹமீத் அல்கரின் கணிப்பு மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் இஸ்லாமிய கிலாஃபத் பீடம் சரிந்து இஸ்லாமிய சக்தியும் குன்றிப்போன துருக்கியில் இன்று மீண்டும் இஸ்லாமிய உயர்வு அரங்கேறியுள்ளது. துருக்கி ஒரு சுற்று வட்டமடித்து, முதலில் இருந்த இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டதோ என ஆச்சரியப்படத் தோன்றுகிறது. ஆட் சியில் அமர்ந்துள்ள நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (AKP) மேற்குலகுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் அடிபணியாத விதத்தில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறது; மக்கள் மத்தியில் பொங்கும் இஸ்லாமிய அலைக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறது. இந்த உயர்வுக்கும் உணர்வு அலைக்கும் பின்னணியில் பெரும்பங்காற்றிய சக்திகள் என்று பார்க்கப்படும் பிரதானமான ஒன்று, பதீயுஸ்ஸமான் சஈத் நூர்ஸியின் ரிஸாலா-யே நூர்.
Be the first to rate this book.