நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ. சகாயம் பணியாற்றிய போது அவரது செயல்பாடுகளைச் செய்திகள், நிகழ்வுகள், மக்கள் வாய்மொழி வழக்காறுகள் வழியாகக் கவனித்து வந்த எழுத்தாள மனப்பதிவு இந்நூல். இது வாழக்கை வரலாறோ துல்லியமான ஆவணப்பதிவோ அல்ல. துதிபாடும் நோக்கம் கொண்டதும் அல்ல. நேர்மையான அதிகாரி ஒருவரைக் கௌரவிக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் அதேசமயம் அதிகாரி ஒருவரின் எல்லைகள் பற்றிய புரிதலுடனும் சுயபார்வை துலங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆளுமைகளை எவ்விதம் கொண்டாடுவது என்பதற்கான சான்றாகும் இத்தகைய எழுத்து முறை தமிழுக்கு மிகவும் புதிது.
Be the first to rate this book.