சுஷில் குமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மூங்கில்’ 2021-இல் யாவரும் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. இது 12 சிறுகதைகளை உடைய இரண்டாவது தொகுப்பு.
“மக்ளே, செல வெசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாதான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்த கேசவன பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். எப்படி தொடங்கும், எங்க போயி முடியும்ன்னு சொல்லிற முடியாதுல்லா? அது, கோயில்ல பிரதிஷ்டை செய்ய மாதிதான் பாத்துக்கோ.”
- சிறுகதையிலிருந்து
Be the first to rate this book.