‘வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்’ எனப் படிமங்களைப் கையாள நேர்ந்த தேசத்திலிருந்து அகதிச் சுமையோடு புலம்பெயர்ந்தோடிக் கொண்டிருக்கும் பெண்ணின் பெருமூச்சையும், வழித்தடங்களையும் “சாவுகளால் பிரபலமான ஊர்” கவிதைகளாய் நம்முன் வைக்கிறார் தர்மினி. இயக்கைகள் தரிக்க முனையும் நமக்கு வேர்களகற்றி வாழ்தல் எப்படி சாத்தியம்? வேர் பிடுங்கப்பட்ட ஒரு பூச்செடியிலிருந்து உதிர்ந்து வழுந்த ஒரு மலராய் தர்மினி தன் வார்த்தைகளூடே ஈழத்து நினைவுகளையும் எரிதழற் கங்குகள் போன்ற கவிதைகளால் போருக்கெதிரான கூறிச் செல்கிறார்.
இவரது கவிதைகளில் வசப்படும் புலம்பெயர் தமிழரின் ஆன்மா நம்மை உறக்கம் துறக்கச் செய்வது. இலங்கைத் தீவினுள் இன்னொரு தீவான அல்லைப்பிட்டியிலிருந்து தப்பியோடி இறுதியாய் தஞ்சம் புகுந்து இதுவரை அகதியாய் ஏற்க மறுத்து வரும் பிரான்ஸ் தேசத்தில் தற்போது. அதற்கான போராட்டத்தையும் செய்து கொண்டு எழுத்தையும், வாசிப்பையும் வாழ்தலுக்கான உந்து விசையாய்த் தொடர்கின்றார் தர்மினி.
Be the first to rate this book.