மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகள் எப்பொழுதும் குலக்குழுச் சடங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும். இதற்குச் சற்று மேலே உள்ள சாதிகள் மாறி வருகிற மத நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இதர இணையான மரபுகளுக்குள் உள்வாங்கிக் கொள்ளும். இன்னும் ஒரு படி மேலே செல்லும்போது, அவை பிராமணர்களால் தங்கள் நலனுக்கேற்றவாறு திருத்தி எழுதி வைக்கப்படும்.
புரோகிதப் பதவி மூலம் பிராமணர்களுக்கு இவ்வாறு சாதி மேலாண்மை அளிக்கப்படும்…
நிலவும் நம்பிக்கைகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது, ஒருங்கிணைக்கப்பட்ட புராணங்களாகப் படைத்தளிப்பது, மேலும் வளர்ச்சியடைந்த சமூகக் கட்டமைப்பிற்கு அவற்றைப் பொருத்துவது ஆகியவையே பிராமணியத்தின் முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது.
- டி. டி. கோசாம்பி
Be the first to rate this book.