இந்நூல் அம்பேத்கரின் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, பௌத்தம் மற்றும் பொருளாதார கோட்பாடு, மார்க்சியம் குறித்த அவரது வெறுப்பு நிலைப்பாடு, அரசியலமைப்பு சட்ட வரைவில் அவரது பங்கு என இவற்றில்தான் தனது ஆய்வுக் களத்தை பிரதானமாக கொண்டுள்ளது. இவை அனைத்திலும் அம்பேத்கர் முன்வைத்த முன்னுக்குப்பின் முரணான ஆய்வு முடிவுகளை, தீர்வுகளை மற்றும் அவரது தத்துவார்த்த தெளிவின்மையை அம்பேத்கரின் எழுத்துகளிலும், பேச்சுகளிலுமிருந்தே மறுக்க முடியாத ஆதாரமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார் தோழர் ரங்கநாயகம்மா. இது சமூக மாற்றத்திற்காக அம்பேத்கரியத்தை உயர்த்தி பிடிக்கும் முன்னணியாளர்களுக்கு ஒருவகையான அதிர்ச்சியை கொடுக்கும் என்றாலும், “செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்த்திவாய்ந்த சித்தந்தாந்தமே இவ்வுலகிற்கு தேவைப்படுகிறது. அது எந்த தத்துவமாகவும் இருக்கலாம். அவர் எந்த சித்தாந்தவாதியாகவும் இருக்கலாம். நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து. ஒரு தலைவர் சொல்லும் போதனைகளில் சரியானவற்றை ஏற்றுக்கொண்டு தவறானதை நாம் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எதையுமே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று முன்னுரையிலே தோழர் ரங்கநாயகம்மா அவர்கள் கூறுவதை நாம் பக்குவத்துடன் உள்வாங்கிக் கொண்டால் அந்த அதிர்ச்சி நமக்கு தேவையில்லாத ஒன்றாகிவிடும்.
Be the first to rate this book.