சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றை குறித்த பிடிவாதங்கள் எதுவும் அவருக்கு அதிகம் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்துப் பார்க்கும் திறம் அவருக்கு உண்டென்பதால் அவரது கருத்துக்களை பிரபஞ்ச அளவுகோல்களாக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் அறவே கிடையாது... ஒருவகையில் இதன் தொடர்ச்சியாக, பாரம்பர்ய மனமும், நவீன சுயமும் முயங்கும் புள்ளிகளில் சுபகுணராஜன் கவனம் நிலைகொள்கிறது.
Be the first to rate this book.