சாதி, வர்க்கம், வாழ்நிலை-சார் குழுக்கள், இதர பிற்பட்ட வகுப்பு, தலித் போன்ற பல்வகையான சமூகப்-பொருளியல் வகைப்பாடுகளில் அடங்கும் ஏராளமான மக்கள் தொகுதிகள் கல்விப் புல ஆராய்ச்சியாளரின் உரையாடலில் இடம்பெறுகின்றன. இப் பொருள் பற்றிப் பலர் பலவாறாக எழுதியுள்ளார்கள். சமூக அறிவியல் அறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதிட வரலாற்றுப் பின்னணிகளையும் மூல நூலாதாரங்களின் பின்புலங்களையும் அரசியல்-பொருளியல் தரவுகளையும், மத நூல்களையும் தீர ஆய்வு செய்துள்ளனர்.
இந்த சாதிகள், புறச் சாதிகளின் தோற்றம் பற்றிய கேள்விக்குள் போகிற அதே நேரத்தில் தலித் பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடுவதில் இந்நூலாசிரியர் மிகுந்த முனைப்பு காட்டுகிறார். இப்பொருள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டோருக்கு இந்த வெளியீடு மிகவும் பயன்படும்.
Be the first to rate this book.