சாதீ -பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எனும் இந்த நூல் பல்வேறு ஆய்வுப் படிநிலைகளையும், எழுச்சிகரமான சிந்தனைகளையும் நம்முன் வைக்கிறது. சாதீயின் தோற்றம் - அதன் நீட்சி- அதனால் மானுடம் படும் பாடுகள் - கேடுகள் என நீண்டு, அச்சாதியெனும் நச்சுக்காற்று கல்விக்கூடங்களில் நுழைந்து எப்படியெல்லாம் இன்னல் தருகிறது என்பதை ஆய்வுகளோடு வழங்கி இருக்கிறார். சாதீய அடுக்குகளும் - வர்ணாசிரம அமைப்புகளும் சிதில சிதிலமாய் நொறுக்கப்பட்டு, மானுடத்தில் நிலவும் மேடு-பள்ளங்கள் சமம் செய்யப்பட்டு, சமத்துவம் மலரும் நாளே நமக்குச் சரித்திர நாளாகும். அந்த மாற்றத்திற்கு ஒரு கருவியாய், ஓர் ஆயுதமாய் இந்நூல் திகழ்கிறது. கல்வியை வழங்கும் கல்விச்சாலைகள், சாதியைக் கற்பிக்கும் சாபச்சாலைகளாய் விளங்குவது எம்மை துயரத்தில் மூழ்கடிக்கும் அவலக்கேடு! இது மாற வேண்டும்! மானுடம் சமத்துவச் சிகரம் ஏறவேண்டும்! எனும் கருத்தை மிக நுட்பமாய் இந்நூல் விளக்குகிறது.
Be the first to rate this book.