கட்டுரையாசிரியர் கலாநிதி. மீனா தண்டா பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதுகளின் இறுதியில் தனது மேற்படிப்புக்காக பிரித்தானியவுக்குக் குடிபெயர்ந்த இவர் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத் தத்துவத்துறைப் பேராசிரியராகவும் ஆய்வாளராகவம் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் சாதிய உறவுகளும் பெண்களும் தொடர்பாக அதிகமான ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கும் இவர், அதன் பகுதியாக பிரித்தானியாவுக்குக் புலம்பெயர்ந்த பஞ்சாபிகளிடம் நிலவும் சாதியமைப்பும் தீண்டாமையும் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.
இக்கட்டுரை சாதிய ஒதுக்கலை பிரித்தானிய இனஒதுக்கல் மற்றும் சமத்துவச் சட்டங்களுக்குள் கொணர்வது தொடர்பான அவரது ஆய்வு அனபவங்களைத் தொகுப்பதாக அமைந்திருக்கிறது. கலாநிதி. மீனா தண்டாவுக்கும் ரேடிகல் பிலாசபி ஆய்விதழுக்கும் எமது நன்றி.
Be the first to rate this book.