எஸ்தர் ராணியின் இரண்டாவது தொகுப்பான இந்நூல் தானியக்க எழுத்து முறையில் அதாவது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் முறையில் எடிட் இன்றி மனம் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்த தருணத்தில் மொழியைக் கொண்டு அதை ஆவணமாக்கியிருக்கிறார். அதில் அதிகம் பெண் வலி, பெண் துயர், பெண் மன நெருக்கடி, பெண் எதிர்கொள்ளும் சூழல் எல்லாமும் பதிவாகிறது. ஆனால் அந்த விஷயங்களை இவரின் மொழியில் கண்டறிய கொஞ்சம் மெனக்கெட வேண்டும். தொகுப்பு முழுக்க இவர் சாத்தனின் காதலி என்பதை நிறுவி கடவுள்களுக்கு எதிராக யுத்தம் செய்கிறார். அதாவது ஆதிக்கவாதிகளால் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்துக்குப் பண்பாட்டுக்கு எதிரான யுத்தம்தான் இது. என்னைப் பொருத்தவரை இத்தொகுப்புச் சிறந்த பெண் உடல் மொழி பேசும் கவிதை தொகுப்பாகவே அவதானிக்க முடிகிறது.
- அன்புடன் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா
Be the first to rate this book.