பல மாதங்களாக காலியாக இருந்த தில்லி சிறைத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ஆகப் பணியில் அமர்ந்தவர் கிரண் பேடி. பலரும் தவிர்க்கும் ’தண்டனைப் பதவி’யாகக் கருதப்பட்ட அப்பணியைப் பொறுப்பேற்ற கிரண்பேடியின் ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பாக, ஒரு பிரம்மாண்டமான மாற்றம் உருவான விதத்தை சொல்லும்படி உருவாக்கப்பட்ட நூல் இது.
கொடிய குழுச்சண்டைகள், பயங்கரமான ஊழல், வன்முறை, போதைப்பொருள் நடமாட்டம் என்று நம்பிக்கைக்கு இடமேயில்லாத நரகக் குழியாகத் தோன்றிய திகார் சிறைக்கு [4]ஒரு போர் வீராங்கனையாகப் பொறுப்பேற்று ’நீங்கள் பிரார்த்தனை செய்வதுண்டா’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தொண்டுடன் மனிதர்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய இடமாக அதை மாற்றியதுவரையான பல்வேறு கட்டங்கள், பிரச்சனைகள், எதிர்ப்புகள், சளைக்காத முயற்சிகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல்.
Be the first to rate this book.