அரசியல், பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் - கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி - ‘சாட்சி சொல்லும் மரமா’க உருக்கொள்கின்றன. சமத்துவமும் நீதியும் நிறைந்த சமுதாயம் பற்றிய கனவுகள், கற்பனைகள், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கி விடுவதில் ‘கருந் துளையை’ ஒத்த நமது சமகால உலகம் தரும் முற்றிலும் எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்து நம்மை ஓரளவு மீட்டு ஆறுதலளிக்கும், ஆசுவாசப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகள் சில இயன்ற அளவு எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அவற்றினூடே வெளிப்படும் சமூகவியல், அரசியல், தத்துவப் பார்வைகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.
Be the first to rate this book.