பேராசிரியர் க. மணி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேர அறிவியல் எழுத்தாளராக உள்ளார்.
சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டு யாரோ ஒரு விஞ்ஞானி கூறியதாக, ஐன்ஸ்டைனின் தத்துவத்தை உலகில் அறிந்து கொண்டவர்கள் மூன்று பேர். “ஒருவன் நான், இன்னொருவர் அதனைப் படைத்த ஐன்ஸ்டைன், மூன்றாமவர் கடவுள்.” கோட்பாட்டை விளக்குவதும், புரிந்து கொள்ள வைப்பதும் மிகக் கடுமையான செயல். எனவேதான் பேராசிரியர் க. மணி சார்பியல் கோட்பாட்டை நீரைப் போல் எளிதாகச் சொல்லும் முயற்சியை இந்த நூலில் மேற்கொண்டிருக்கிறார். அதற்கு உறுதுணையாக மார்ட்டின் கார்ட்னர் எழுதியுள்ள ‘சார்பியல் கோட்பாடு – ஒரு எளிய விளக்கம்’ என்ற நூலைப் பயன்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து பேராசிரியரின் அறிவியல் நூல்களை வெளியிடுவதும் பரப்புவதும் எமது மொழிபெயர்ப்பு மையத்தின் முக்கியப் பணியாகவே நாங்கள் கருதி வருகிறோம்.
Be the first to rate this book.