கி.பி. 1520 காலக்கட்ட்த்தில் போர்த்துக்கிசியர்கள் கோவா மீது தங்களின் தர்மம், நம்பிக்கை ஆகியவற்றோடு இன்னுயிர்களையும் காத்துக்கொள்ள தென்னகம் நோக்கி வலசை வந்தார்கள் சாரஸ்வத பிராமணர்கள். தாங்கள் செய்து வந்த வியாபாரம், விவசாயம் ஆகிறவற்றைத் துறந்து இன்னல்கள் பல சுமந்தபடி மங்களூர், காசர்கோடு, மலபார் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தார்கள்.
இதுதான் சாரஸ்வதக் கனவு நாவலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நாவலில் வருகிற திகம்பர பாதாள சன்னியாசி இருவர், சாரஸ்வதர்கள் கடந்த காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தலைமுறையின் நடுவிலும் தோன்றி அவர்களை வழி நடத்துவது நாவலுக்குக் கனத்தைக் கொடுக்கிறது.
கன்னடச் சிறுகதைகள், சீனச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் எனத் தனது இலக்கியப் பயணத்தை முன்னெடுத்த கோபால கிருஷ்ண பாயின் முதல் நாவல் "ஸ்வப்ன சாரஸ்வதா" இவருடைய முதல் நாவலே சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளது.
இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் இறையடியான் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் 18 மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2013 சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு பரிசினை வென்றார்.
Be the first to rate this book.