பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன. அவை சாத்தியமற்ற கவிதைகள் என்பதினால் அவை மனித மனத்தின் இருண்ட பகுதிகளைத் தயவுதாட்சண்யமின்றிச் சொல்கின்றன. பால் செலானின் படிமக்கோவைகள் முற்றிலும் புதிய மொழிச்சேர்க்கையினால் உருவாகின்றன. இக்கவிதைகள் மொழியின் அதிகாரத்தையும் நுட்பமாக ஆராய்கின்றன. பல இலக்கிய விமர்சகர்கள் பால் செலானின் கவிதைகளைச் சர் ரியலிச கவிதைகள் என வகைப்படுத்துகிறார்கள். அத்துடன் மானுடகுல பிரக்கஞையின் அற விழிப்பில் தோன்றிய 'தன்னிகரற்ற கவி' என அடையாளப்படுத்துகிறார்கள். பால் செலானின் கவிதைகளில் ஜெர்மானிய ரொமாண்டிசிசமும் யூத மெய்யியலும் கலந்திருப்பதாகவும் பலரும் வாசித்துச் சொல்கின்றனர்.
ஜெர்மானிய கவிகள் ரில்கே, ஹோல்டர்லின், செலான் என என் மனதினடியில் ஒரு நீரோட்டம் ஓடுகிறது. அதில் என் கைகளும் கால்களும் நனைந்திருப்பதை எழுதவேண்டுமென எப்போதுமே எண்ணி வந்திருக்கிறேன். முதன் முதலாகப் பால் செலனின் கவிதைகள் என் வழியாகத் தமிழுக்கு வருவதில் பெருமிதம் கொள்கிறேன்.
- எம்.டி. முத்துக்குமாரசாமி
Be the first to rate this book.