பள்ளிக்கூட சிறுவனிடம் இருக்கிற அந்தக் குறும்பையும், நகைச்சுவையும், எள்ளலும் சமயத்தில் சமீபத்தில் சுய எள்ளலும் உளள் கட்டுரைகள் மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன.
மேலோட்டமான வாசிப்பில் நகைச்சுவையாக இருந்தாலும் பிறந்தநாளில் வருகிற செல்வியும், துணிக்கடையில் வேட்டியை மடித்துக்கட்டியிருந்த பண்யாளும், “நீங்க அப்டியே இருக்கேளே..” என்பதில் இருக்கிற அங்கதமும் அதன் உள்ளார்ந்த சோகமும், காந்திமதியின் தாயாரிலும், மூப்பு கட்டுரையிலும் ஆழமான வேறொரு தொனியில் இருக்கின்றன.
சந்திப்புகள், விழாக்கள், பாடகர்கள், பாடல்கள், உணவு, திரைப்படம், பால்யநினைவுகள், பயணம், நேர்காணல், நூல் மதிப்புரை என்று சுவாரஸ்யமான பல பதிவுகள் இருந்தாலும் வெளிவராத திரைப்பாடல்களையும், அவற்றின் ராகங்களையும், தகவல்களையும் உங்கள் அளவுக்கு யாரும் தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்.
- செழியன்
Be the first to rate this book.