விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இப்பதிப்பில், அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை மிக முக்கியத்துவம் பெறுகிறது . நவீன சமூகத்தில் சாதி இன்னும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனையும் அம்பேத்கருக்கும் காந்திக்குமான முரண்கள் அடங்கா அதிர்வுகளாக முழங்கிக் கொண்டிருக்கின்றன. அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு ராய் புத்துயிர் பாய்ச்சுவதோடு ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையே சமத்துவ சமுதாயத்தினை உருவாக்கும் என்பதனை அம்பேத்கரை முன் நிறுத்தி நமக்கு வரலாற்றையும் உண்மையையும் காட்டுகிறார். இந்த நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில், பிரேமா ரேவதி செம்மையாக மொழிபெயர்த்துள்ளார்.
Be the first to rate this book.