இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது.
மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்ப்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்.
ஒரு படைப்பு திரும்ப திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்ச்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாக தொடர்ந்து ஏற்ப்படுத்திவரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக நவீன தமிழ் இலக்கிய சூழலோடு ஏற்ப்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே.
எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
Be the first to rate this book.