சிறுகதைகள் எப்போதும் சவாலான வடிவாகவே இருக்கிறது. பழக்கம் காரணமாக ஒரு நல்ல சிறுகதையை எழுதிவிட முடியாது. இன்று சிறுகதையின் மையம் மாறியிருக்கிறது. என் கதைகள் சூதாடியின் கையிலிருக்கும் சீட்டுகட்டுகளை போல கிடைப்பதை வைத்து கொண்டு வேறுவேறு சீட்டுகளை எடுத்தும் மாற்றியும் கைவிட்டுமே உருவாகிறது. இதில் உள்ள புதிர்மைதான் எழுத்தாளானாக என்னை வசீகரிக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் வசிகரத்தையும் விந்தையின் ஊடாக வெளிபடும் அன்றாட உலகத்தையுமே நான் கதையின் முக்கிய சரடாகக் கொள்கிறேன்.
வரலாறு எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளை கடந்து செல்கின்றன எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகிடும் வாழ்வின் மகத்துவஙளை அடையாளம் காட்டுகின்றன இக்கதைகள்.
காலனியம் ஏற்ப்படுத்திய மோசமான விளைவைத் தொடர்ந்து எஸ்.ரா. தனது சிருகதைகளில் பதிவு செய்து வருகிறார். அவை அழுத்தமான வரலாற்று நினைவுகள்.
குறுங்கதைகள், மிகைபுனைவுகள், அதிகதைகள் மாய யதார்த்த கதைகள், வரலாற்று மீள்புனைவுகள், நடப்பியல் கதைகள், உருவக்கதைகள் எனப் புனைவின் எல்லையற்ற சாத்தியங்ளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டுவதே இவரது எழுத்தின் சாதனை.
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
Be the first to rate this book.