அய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன.
அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மற்றொன்று.
எதையேனும் நிறுவவோ எதையேனும் சார்ந்துகொள்ளவோ விரும்பாத மனநிலையையே அய்யப்ப மாதவன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதனால் எல்லாப் பொருள்களும் எல்லாத் தருணங்களும் அனுபவத்தையே முதன்மையாக்குகின்றன. அந்த அனுபவவெளி வாசிப்பில் புதிய திசைகளுடன் விரிகிறது.
Be the first to rate this book.