வாசிப்பு என்பதே மிகவும் குறைந்து போய் விட்ட காலம். அதுவும் சரித்திரம் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. 1440 ஆண்டு கால இஸ்லாமிய அரசியல் வரலாற்றை படிப்பவர்கள் "அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உலக அளவில் எவ்வளவு பெரிய கண்ணியத்தையும் மரியாதையும் கொடுத்திருந்தான்" என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
நம்முடைய குறைகளை அறிய வேண்டுமானால் 1440 ஆண்டு கால இஸ்லாமிய சரித்திரத்தின் ஏற்ற இறக்கங்களை சாதனை சோதனைகளை விவரிக்கக் கூடிய நீண்ட நெடிய வரலாற்றை நிதானமாக படித்தாக வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய நிறை குறைகளை அறிந்து எதிர்காலத்தில் நம்மை சரி செய்து கொள்ள முடியும். உலகின் மேற்கிலிருந்து கிழக்கு வரை வடக்கிலிருந்து தெற்கு வரை கண்களை அகல விரித்து பாருங்கள்! காதுகளை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! 1400 ஆண்டு காலமாக கேட்கும் அழு குரல் நம்மை உண்ணவும விடாது உறங்கவும் விடாது.
அதன் ஒரு படியாக தான் "ரஷ்யாவில் இஸ்லாம்" என்ற இந்த நூல் இந்த நூலின் நோக்கம் தற்போதைய ரஷ்யாவை பற்றியது மட்டுமல்ல. ஓட்டு மொத்த மத்திய ஆசியா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இஸ்லாம் எப்படி வந்து சேர்ந்தது? பிறகு எப்படி வளர்ந்தது? முஸ்லிம்களின் ஆட்சி எப்படி இருந்தது? முஸ்லிம்களின் பொற்காலமாக இருந்த மத்திய ஆசியாவின் ஆட்சிக்காலம் பொல்லாத காலமாக எப்படி மாறியது?
முஸ்லிம்களின் ஆட்சி எப்படியெல்லாம் வீழ்ந்தது? முஸ்லிம்கள் அதனால் அனுபவித்த சோதனைகளை என்ன? மஸ்ஜித் மதரஸாக்கள் போன்ற இஸ்லாமிய சின்னங்கள் எவ்வாறெல்லாம் சின்னாபின்னப் படுத்தப்பட்டன? தாங்க முடியாத சோதனைகளுக்கு இடையிலும் இஸ்லாம் நிகழ்த்திய சாதனைகள் என்ன? முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள் மனம்மாறி அதே இஸ்லாத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள்? கொடூரமான சித்ரவதை மற்றும் போராட்டத்திற்கு மத்தியிலும் இஸ்லாத்தையும் குர்ஆனையும் ஷரீஅத்தையும் பாதுகாப்பதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை மேற்கொண்டார்கள்? போன்ற பல கேள்விகளுக்கான தீர்வை இந்நூல் தரும்.
Be the first to rate this book.