ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள்,கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குயின் பதிப்பகம் அவற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். 1992ல் சாஹித்ய அகாடமி விருதும், 1999ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள கசௌலியில் ரஸ்கின் பாண்ட் பிறந்தார். ஜாம்நகர், டேராடூன், புது தில்லி, சிம்லாவில் வளர்ந்தார். இளைஞனாக அவர் சேனல் தீவுகளிலும் லண்டனிலும் நான்கு ஆண்டுகள் கழித்தார். 1955ல் இந்தியா திரும்பினார். இப்போது அவர் மஸூரியிலுள்ள லண்டூரில் தன் தத்தெடுக்கப்பட்ட குடும்பத்துடன் வசிக்கிறார்.
Be the first to rate this book.