நாம் அன்றாடும் உண்ணும் உணவுகளில் அது சைவமாய் இருந்தாலும் அசைவமாய் இருந்தாலும் பலவிதமான புரதச் சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் இன்னும் பிற சத்துக்களும் அடங்கியுள்ளன.நோய் நொடியற்ற வாழ்வுக்குக் காரணமாக அமைவது நல்ல சத்துள்ள ஆகாரமே ஆகும். இந் நூலில் நூறு வகை அசைவ சமையல்கள் பற்றி நான் அறிந்தவற்றையும் செய்முறையின் அடிப்படையிலும் விவரித்து உள்ளேன். இச்சமையல்களுக்கு சேர்க்கப்படும் மளிகை மற்றும் இதர சாமான்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் அல்லது இதே அளவுகளின் படியும் சேர்த்து சமைத்திடலாம்.அசைவ சமையல்களில் நம் தென்னிந்திய சமையல் முறைக்கு தனிச் சிறப்பு உண்டு என்றாலும், வட இந்திய முறை, சைனீஸ் முறை என்று இதர சமையல் முறைகள் சிலவற்றையும் சேர்த்துள்ளேன். படித்துப் பயன் பெறவும்.
Be the first to rate this book.