பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு விஷவாயுக் கூடமாக மாறிவிட்டது. முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது வரியை வசூலிப்பதற்காகக் கருப்புப் பணத்தைத் துரத்தி வருகிறது” என்றெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார். குருமூர்த்தி கூறியிருப்பவை எவையும் புதிதல்ல. இந்த உண்மைகளைப் பேச வேண்டிய அல்லது ஒப்புக்கொள்ள வேண்டிய அல்லது சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் பா.ஜ.க. அரசும் மோடியின் ஆதரவாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதுதான் புதிது.ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெறுக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தொடக்கத்திலேயே, அது ஏற்படுத்தவுள்ள பேரழிவு குறித்து சமூக அக்கறை கொண்ட பொருளாதார வல்லுநர்களும் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் பேசிய சமயத்தில், அவர்களையெல்லாம் மோடி எதிர்ப்பு அரசியல் நடத்தும் பேர்வழிகள், நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் துக்ளக் இதழின் வழியாக ஏசிவந்தவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி.
Be the first to rate this book.