13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் ஸூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைள் இவை.
ரூமியின் கவிதைகளில் அன்பில் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்படுகின்றன. எனவே, சில நேரங்களில் அவை மிகவும் எளிமையானவையாகத் தோன்றலாம்; இளம் காதலன் ஒருவன் தன் காதலியிடம் பேசுவதுபோல் தெரியலாம். ஆனால், மனிதக் காதலுமேகூட இறைக் காதலின் பிரதிபலிப்புதான் என்பதை ரூமி மீண்டும்மீண்டும் தனது காவியத்தில் உணர்த்துகிறார்.
அன்பின் மூல முகவரி இறைவன்தான் என்பதால் ஒவ்வோர் அன்பும் இறைவனிடமே இட்டுச் சென்றாக வேண்டும். அதற்கான வழியையே ரூமியின் கவிதைகள் நமக்குக் காட்டுகின்றன.
Be the first to rate this book.