உலகம் முழுவதும் ரூமியின் கவிதைகளை வாசிக்கும் ரசனை மிக வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்ச் சூழலிலும் ரூமி கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், எந்த அளவு அவை ரூமியின் ஸூஃபித்துவத்தைப் புரிந்துகொண்டு செய்யப்படுகின்றன என்பது சிக்கலாகவே இருக்கிறது. எனவே, ரூமியின் கவிதைகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அவற்றிலிருந்து ஆன்மிகப் பயனடையவும் அவருடைய ஸூஃபித்துவக் கொள்கையை விளக்கிச் சொல்கின்ற கருத்தியல் நூல்கள் அவசியமாகின்றன. அந்தத் தேவையை வில்லியம் சிட்டிக்கின் இந்நூல் அற்புதமாக நிறைவேற்றுகிறது.
இதுகுறித்த பிற நூல்களில் காணப்படும் நவீனத்துவப் பிழைகளால் கறைபடாத மரபார்ந்த ஒரு கோணத்தில், தான் எடுத்துக்கொண்ட பொருண்மையை கட்டுப்பாட்டுடன் அணுகியுள்ள வகையில் இந்நூல் பெருமதிப்பு கொண்டதாகிறது. நவீன மனிதன் தனது அறியாமையால் தானே உண்டாக்கிக்கொண்ட தீர்வற்ற சிக்கல்களை எதிர்கொண்டு நிற்கும் சூழ்நிலையில், இந்நூல் சமகால வாழ்வுப் புலத்துக்குள் அதற்கு மிகவும் பொருத்தமான போதனைகளை நல்கும் ரூமியை ஆழமாக உட்புகுத்தும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.