கி.பி. 1778 மே 7ஆம் தேதி, கேரளாவில் இருந்து ரோமுக்கு, பாரேம்மாக்கல் தோமா என்ற பாதிரியார், பயணம் புறப்படுகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கடல் வழியாக குளச்சல் துறைமுகம் வரும் பாரேம்மாக்கல், அங்கிருந்து கோட்டார் (நாகர்கோயில்) – மணப்பாடு - தூத்துக்குடி – நாகப்பட்டிணம் – மைலாப்பூர் வழியாக தமிழகத்துக்குள் பயணம் செய்கிறார்.
இந்த பயணம் பற்றி பாரேம்மாக்கல் எழுதியது ‘ரோமாபுரி யாத்திரை’ என்னும் நூலாக தமிழில் வந்துள்ளது. மலையாளத்திலிருந்து தமிழில் யூமா. வாசுகி மொழிபெயர்த்துள்ளார். பேராயராகத் திரும்பி வந்தவர் மாங்காளிணி தின்றதால் காளிணிச்சல் வந்து செத்தும் போனார் என்பதாகத் துயர் மிகுந்த யாத்திரை முடித்து வைக்கப்படுகிறது.
மிச்சக் கதையில் சொல்லப்படும் “பேராயரின் காளிணிச்சலுக்குத் தரப்பட்ட மருந்துகள் எதுவும் காளிணிச்சலை குணப்படுத்த அல்ல” என்ற வரிகள் அதிகார வன்மத்தின் குறுக்குவெட்டு. பேராயர் செத்துக்கிடந்த பாயில் இருந்த தமது கவர்னர் நியமனத்துக்கான கடிதத்தை எடுத்துக்கொண்டு பாரேம்மாக்கல் கோவர்ணதோர் தனித்து ஊர் திரும்புவது ஒரு காவிய சோகம்.
Be the first to rate this book.