இருப்பின் எல்லையற்ற விளையாட்டில் சாட்சியாகவும் பங்கேற்பாளனாகவும் நான் கவியாகையில் நிற்பதை எனக்கு ரால்ஃப் வால்டோ எமர்சனும், ழாக் தெரிதாவும் இன்னும் பல தத்துவஞானிகளும் உலகக் கவிகளும் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
எமர்சனிடம் இயற்கை புனிதப் பிரதியாகிவிடுகிறது. எமர்சன் அவருடைய ‘இயற்கை’ எனும் நூலில் இயற்கையின் காதலனுக்கு உள்ளும் புறமும் ஒன்றோடொன்று இயைபு பொருந்தியவை; இயற்கைக்குச் சாட்சி நிற்றல் என்பது கவிக்கு ஒருவகையான ஆன்மிக ஒன்றிணைவு என்று எழுதுவார். ஆகையால் கவியின் கண்கள் இயற்கையைப் பார்ப்பது போலவே இயற்கையும் கவியைப் பார்த்திருக்கிறது. நான் எமர்சனின் வழி வந்த ரொமாண்டிக் கவிஞனல்ல. இயற்கை கொடூரமும் அநீதியும் நிறைந்தது என்பது புதிய செய்தியல்ல. சார்ல்ஸ் டார்வினைப் பாலபாடமாகப் படித்தவர்கள் அனைவருக்கும் அது தெரிந்ததுதான்.
ழாக் தெரிதா இயற்கையும் அகமும் ஒன்றின் பகுதியாக மற்றொன்று ஒன்றிணைந்த எமர்சனின் மெய்யியலை வித்தியாசப்படுத்துதல், அர்த்ததைத் தள்ளிப்போடுதல் என்ற இரண்டு கருத்துக்களின் வழி எல்லையற்ற அர்த்த விளையாட்டு சாத்தியப்படுவதை தத்துவமாக்கி கலைத்துவிடுகிறார். தெரிதாவுக்கு சாட்சி நிற்றல் என்பது எப்போதுமே நேரிடையானது அல்ல; அது மொழி, நினைவு, அர்த்தத்தின் ஸ்திரமற்றதன்மை ஆகியவற்றால் ஊடாட்டத்திற்கு உட்படுத்தப்படுவது
அப்போது கவிதை என்னவாகிறது?.”
கடல் தன் பிரம்மாண்ட நீர்க் கண்களால் பார்த்திருக்கிறது:
சாட்சி நிற்றலின் கலை - கவிதை
முன்னுரையில் - எம்.டி. முத்துக்குமாரசாமி
Be the first to rate this book.