ரித்விக் கட்டக் ஐம்பதாவது வயதில் இயற்கை எய்தியபோது தன்னுடைய இருபத்தைந்தாண்டு காலத் திரைப்படத் துறை வாழ்க்கையில் நமக்கு விட்டுச் சென்றது, எட்டு முழுமையான படங்களும் சில முடிக்கப்படாத படங்களுமே. அவரை ஒரு திரைப்பட இயக்குநர் என்று மட்டுமே கருதினால் அவர் படங்களின் எண்ணிக்கை குறைவானதுதான். ஆனால் அவர் வெறும் திரைப்பட இயக்குநராக மட்டும் இருக்கவில்லை. அவர் ஒரு திரைப்படக்கலை ஆசிரியர். சில காலம் புனே திரைப்படக் கல்லூரியின் துணை முதல்வராகவும் இருந்தவர். அவர் ஒரு நாடக ஆசிரியர்.ஒரு தயாரிப்பாளர். இந்திய மக்கள் நாடக இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவர் ஒரு சிறுகதை ஆசிரியரும்கூட. ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. இதில் பல, அவர் இருபது வயதாயிருக்கும்போதே எழுதப்பட்டவை. இந்நூல் அவரது படைப்புகள் குறித்த ஒரு ஆழமான பார்வையை நமக்கு தருகிறது.
Be the first to rate this book.