“ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்து கொண்டிருக்கும் பொது அந்த படத்தின் இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்து பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிவிட வேண்டும்” என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமான திரைப்படங்களாகத்தான் திரு. வஸந்த்தின் திரைப்படங்களை ஆழ்ந்து ரசிக்கிறேன்.
அதே சமயம் “சினிமா ஒரு காட்சி ஊடகம்” என்பதை அழுத்தமாகக் கடைப்பிடிப்பவர் திரு. வஸந்த். அவரது அழகான ரசனை உணர்வு அவரது எல்லா படங்களிலும் வெளிப்படும்.
தனது திரையுலக வெற்றிகளால் அவர் எப்போதும் கர்வம் கொள்ளவதில்லை... இயக்குநர் வஸந்த் என்றாலே சிரித்த முகமும், எளிமையும், வெள்ளந்தியான குணாதிசியமும்தான் எல்லோரது நினைவிற்கு வரும்.
- இயக்குநர் மகேந்திரன்
Be the first to rate this book.