பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப்
புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
5 அருமையான புத்தகம்
ஒரு துடிப்பு மிக்க மனிதரின் வாழ்கை வரலாறு. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நூல் ஆசிரியர் இன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Manivannan 16-03-2019 01:25 pm