அழகியல் என்பது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும், தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில் பல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி உன்னதமான மனிதன், உன்னதமான சமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள். எனவே தங்களது அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில், அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னதப் படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உணர்கிறார்கள். மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை; அதைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.
Be the first to rate this book.