மனித உடல் என்பது அரசியல் களம் மட்டுமல்லாமல் அது மனித உடல் ரீதியான உறவுகளின் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ்இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் என்று பல்வேறு தளங்களைக் கடந்து பயணிக்கின்றன. மனித உடல் என்பது ஒரு சதுப்பு நிலம். அதில் மிருகங்களும் திடகாத்திரமான பூதங்களும் தேவதைகளைப் போல் உருவம் மாற்றிக் கொண்டு அலைகின்றன. தேவதைகள் சடசடக்கும் இறக்கைகள் சகிதமாக நரபட்சிணிகள். ‘ரெமோன் எனும் தேவதை’ சித்துராஜ் பொன்ராஜின் இரண்டாவது தமிழ்ச் சிறுகதை தொகுப்பு.
Be the first to rate this book.