நவீன உலகின் ஆற்றல்மிகு ஆட்சியாளர்களில் ஒருவர்தான் துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்டோகன். முஸ்லிம் உலகில் அவரைப் போல் மனவலிமையும் ராஜதந்திரமும் செயலாற்றல் உணர்வும் நிறைந்த மற்றொரு ஆட்சியாளரைக் காண்பது அரிது. தமது பண்பாட்டைக் கைவிடாமலேயே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சொந்தக் காலில் நிற்கும் வகையில் நவீன துருக்கியைச் செதுக்கியவர் என்பதுதான் எர்டோகனின் பெரும் சாதனை ஆகும். மதச்சார்பற்றத் தன்மை என்னும் பெயரில் அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, துருக்கி மண்ணில் அதனுடைய பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் அத்தாதுர்க் குழிதோண்டிப் புதைத்த இடத்திலிருந்து மிகவும் சாதுர்ய மாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்பட்ட எர்டோகன், துருக்கியின் உஸ்மானிய, இஸ்லாமியப் பாரம்பர்யப் பெருமையை மீட்டெடுத்தார். ஆகவே துருக்கியின், எர்டோகனின் வரலாறும் செய்திகளும் அரசியல் மாணவர்களைப் பொறுத்தவரை பெரும் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.