இரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அடையக்கூடிய அர்த்தமற்ற அபத்த கணங்களைப் பற்றிய அங்கதம் மிகுந்த சித்தரிப்பினை வழங்குகின்றன. நவீன கவிதைக்குள் இந்திரஜித் ஒரு புதிய உணர்வுத்தளத்தை உருவாக்குகிறார்.
Be the first to rate this book.