சிறுவர்களுக்கான நூலாக இது அமைந்திருந்தாலும் பெரியவர்களும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்வதற்கான நிறைய சங்கதிகள் நூலில் உள்ளன. தாமதமாக வரும் ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்காமல் போய்விடுமா? லோகோ பைலட்டுக்கு வண்டியைத் திருப்பும் வேலை இருக்காதா? தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் வைக்கும் கற்களால் ரயில் தடம் புரளாதா? என்ற குழந்தைத் தனமான கேள்விகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய தொழில் நுட்பச் சங்கதிகளும் நிறையஉண்டு.
கூடவே இருதரப்பாரும் தெரிய வேண்டிய ரயில் தோன்றி வளர்ந்த வரலாறு – ரயில் டாய்லெட் தோன்றிய கதை உட்பட – உலக அளவில் இயங்கிவரும் பல்வேறு விதமான ரயில்கள் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்புகளும் அருமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
Be the first to rate this book.