உலகளாவிய பயங்கரவாதம் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்று வளர்ந்து நிற்கிறது. வல்லரசு நாடுகள் தொடங்கி விளிம்பு நிலை நாடுகள் வரை எங்கும் வன்முறைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள்!
ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் உண்மையாகவே இந்தியா ஓர் அமைதிப் பூங்காதான். இந்த அமைதிப் பூங்காவிற்காக நாள்தோறும் சோர்வின்றி, எத்தகைய அங்கீகாரமுமின்றி, இந்திய மக்களின் பாதுகாப்பு ஒன்றையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்புதான் ரா (R&AW). இந்திய உளவுத்துறை என்று அழைக்கப்படும் ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு’.
இத்தகைய சிறப்புமிக்க ‘ரா’வின் தோற்றம், விரிவாக்கம், வெற்றி தோல்விகள், தேசத் தலைவர்கள் அதன் மீது காட்டிய நம்பிக்கைகள் மற்றும் அவநம்பிக்கைகள் என்று புத்தகமெங்கும் ‘ரா’வின் முழுப் பரிமாணமும் மிகச் சிறப்பான முறையில் இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்திய ஜனநாயகத்தைக் காத்திட அல்லும் பகலும் உழைக்கும் ஒரு போராளியான ‘ரா’வின் வரலாறே இந்தப் புத்தகம்.
படித்துப் பாருங்கள், தேசப் பாதுகாப்பில் ‘ரா’ எனும் கதாநாயகனின் சாகசங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
Be the first to rate this book.