வரலாறு உலகின் பல்வேறு சமூகங்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பண்பாடுகளை - நாகரிகங்களை - வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ள அரபு, யூத இனத்தவர்களான இஸ்மவேலருக்கும் - இஸ்ரவேலருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் ஃபலஸ்தீன் நிலங்களில் அன்று முதல் இன்று வரை காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. நிகழ்காலத்தில் ஃபலஸ்தீன் பிரச்சனை தேசிய பிரச்சனை மட்டும் அல்ல, அவர்களின் உரிமைப் போராகவும் கருத்தியல் யுத்தமாகவும் இருக்கின்றது.
ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தை எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமாக ரத்தத்தை ஓட்டும் மாபெரும் அவலம் ஃபலஸ்தீன் நிலங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றது. அது குறித்த வரலாற்று செய்திகளும், தெளிவான பார்வைகளும் காலம்தோறும் புதிய தலைமுறைகளுக்குத் தொடர்ந்து அறிமுகம் செய்வது முக்கியப் பணியாகும்.
ஃபலஸ்தீன் பற்றிய நூல்கள் தமிழில் ஆங்காங்கே சில தென்பட்டாலும், இந்நூல் அதில் இருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. 1897- ஆம் ஆண்டு தியோடர் ஹேர்ஸல் என்பவரால் சியோனிஸம் முறையாக அறிவிக்கப்பட்டது முதல் 2019 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் நடைபெற்ற காஸா இஸ்ரேல் மோதல் வரை முக்கியச் சம்பவங்களையும், அரசியல் பார்வைகளையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டு உள்ளது.
Be the first to rate this book.