159 அத்தியாயங்கள், மூன்றே கால் வருடங்கள்...ஒரு நாவல்...ஆம். இந்த சாதனையை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பத்திரிகை வரலாற்றில், ‘ரத்த மகுடம்’ சரித்திரத் தொடர்கதை, ‘குங்குமம்’ வார இதழில் நிகழ்த்தியது. இதற்கு முழுக்க முழுக்க மூவர் காரணம். முதன்மையானவர் எங்கள், ‘தினகரன் & குங்குமம்’ குழும நிர்வாக மேலாளரான திரு.ஆர்.எம்.ஆர்., அவர்கள். அடுத்து ஓவியம் வழியே தொடருக்கு உயிர் கொடுத்த ஓவியர் ஸ்யாம் ஸ்யாம். இறுதியாக, ஆனால், முழுமையாக வாசகர்கள். தொடர்கதை என்பது கூட்டு முயற்சி. எழுத்தாளரும் ஓவியரும் இரண்டறக் கலப்பதால் உருவாகும் சூல். பத்திரிகை நிறுவனம்தான் மருத்துவமனை. பிரசவம் பார்ப்பவர்கள் வடிவமைப்பாளர்கள். ஜனித்த குழந்தையை நீராட வைப்பவர்கள் அச்சகத்தார். உறவினர்களுக்கு காட்ட சுமந்து வரும் செவிலியர்கள், பத்திரிகை ஏஜெண்ட்டுகள். அதைக் கரங்களில் ஏந்தி உச்சிமுகர்ந்து தாலாட்டி வளர்ப்பவர்கள் வாசகர்கள்.
Be the first to rate this book.